வெளிச்சத்திற்கு வாங்க-3
வெளிச்சத்திற்கு வாங்க என்ற நக்கீரன் குழுமத்தில் இருந்து வெளிவரும் பால ஜோதிடம் என்ற வார இதழில் வெளி வந்த தொடர் கட்டுரைகளின் தொகுப்பு. இது சோதிட குறிப்புகளை வித்தியாசமான நடையில் சொல்லி வரும் தொடர்.
இது சோதிடம் தெரியாதவர்களும் சொல்ல வரும் கருத்துக்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான தமிழில் நடைமுறை வாழ்க்கை செய்திகளின் அடிப்படையில் எளிதில் புரியும்படி அமைத்து தந்து இருப்பது ஆசிரியரின் திறமைக்கு ஓர் சான்று .
இது வரை 15க்கும் மேற்பட்ட பல்வேறு தலைப்புகளில் நூல் படைத்த ஆசிரியரின் இன்னொரு படைப்பு. இது மின்னூலாக மட்டும் அல்லாது, ஆடியோ புத்தகமாக podcast சானலிலும் வருவதால், படிக்கதேரியாது ஆனால் பேசினால் புரியும் என்பவர்கள் கூட கேட்டு மகிழலாம்.