கிறுக்கல்
|
நூலின் பெயர் |
விசு அய்யரின் கிறுக்கல்
|
|
நூல் ஆசிரியர் |
விசு அய்யர் |
|
வெளியீடு |
மணி பதிப்பகம். |
|
விலை |
பகுதி 1 ரூ.60 பகுதி 2 ரூ.50 |
|
முதல் பதிப்பு |
2022 |
|
பதிப்பக தொடர்புக்கு
|
|
|
ஆசிரியர்
தொடர்புக்கு |
விசு அய்யரின் கிறுக்கல் என்ற இந்த புத்தகம் இரண்டு பகுதிகளாக வெளி
வந்துள்ளது.
நூல் ஆசிரியர் தன் எண்ணத்தில் வந்ததை கிறுக்கி தள்ளி விட்டார் போல என
சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.. இது நீண்ட நாட்கள் எழுதிய படித்த பார்த்த சிந்தனைகளை
தொகுத்து படைத்து இருக்கிறார்.
இந்த புத்தகம் பொதுவான ஒரு இலக்கை நோக்கி அமையாமல் பல சிந்தனைகளை தனது அனுபவ
பகிர்வாக பகிர்ந்து உள்ளார் என்பதை இதில் உள்ள ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கும்
போது உணர முடிகிறது.
இந்நூல், பல பகுதியில் கவிதை நடையில் இருந்தாலும் மரபு கவிதையில் இல்லை, இருப்பினும்
படிப்பதற்கும் ரசிப்பதற்கும், சுவைப்பதற்கும் சிந்திப்பதற்கும் அறிவுக்கு
விருந்தாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இந்த புத்தகத்திற்கு கருப்பு நிற அட்டை அமைத்து இருப்பது என்ன காரணம் என்பது
புரியவில்லை என்றாலும், இது நூலாசிரியருக்கு இந்நூல் வெளியீடாகும் வருடம் சனி திசை
நடக்கலாம் அதை ஒட்டி சென்டிமென்ட் கருதி சோதிட சிந்தனையுடன் இப்படி வைத்து
இருக்கலாம் என்று தோன்றியது.
ஓர் சில இடங்களில் எழுத்து பிழை திருத்தலாமா என்று பதிப்பாளர்களாக
நூலாசிரியரிடம் கேட்ட போது, இது கிறுக்கல் அதனால் அப்படியே இருக்கட்டும் அப்போது
தான கிறுக்கிய இயல்பு தன்மை வெளிப்படும் என்று சொல்லி திருத்தம் வேண்டாம் என்று
சொல்லி விட்டார். நூலாசிரியர் விருப்பப்படியே அதை பதிப்பாளராக நாங்களும் அப்படியே
விட்டு விட்டோம்.
இந்த புத்த்கத்திற்கான விலை நூல் கட்டமைப்பு மற்றும் நேரம் செலவு செய்ததற்கு
தானே தவிர உங்கள் ரசனைக்கு அல்ல என்பதை புரிந்து கொள்வது சிறப்பு.
இந்த புத்தகம் அமேசான், மற்றும் விக்கி மீடியாவில் கிடைக்கும். உலகம்
முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் கேட்டு மகிழும் நூலாசிரியரின் channel G என்ற
podcast சானலில் ஆடியோ புத்தகமாகவும் கேட்கலாம்.
நூல் படைப்பாளிகள் தங்கள் புத்தகங்களை நூல் மதிப்புரைக்கு அனுப்பலாம். அவைகள் விமர்சன குழு தேர்வின் படி மதிப்புரை செய்து வெளியிடப்படும். இதற்கு இந்த படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புங்கள்..
