ஒளவையார் அருளிய "மூதுரை"
சங்க இலக்கியங்களில் பல ஒளவையார் வாழ்ந்தார்கள் என்ற சில பல ஆய்வுகள் சொல்லி இருந்த போதும் எங்களது தொடர் முயற்ச்சியில் வெளியாகும் ஆடியோ தொகுப்பு இது.
இந்த ஆடியோவில் மூதுரை பாடல்கள் முழுவதும் உரையுடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த படைப்பு அருளாலயம் டெலிகிராம் சானலில் தினமும் ஒன்றாக ஒளிபரப்பானது.
இந்த படிப்பிற்காக குரல் கொடுத்தவர் எங்கள் அன்புக்குரிய சென்னையை சேர்ந்த திரு.ஸ்ரீராம் அவர்கள். அவர்களது எடுப்பான குரலில் தமிழ் வளம் நிறைந்த குரலில் கேட்பவர் மனதில் பதியும் படி பாடலும், பாடலுக்கு உரிய பொருளும் என மிக சிறப்பாக வந்துள்ளது. மாதிரிக்கு ஒன்று கேட்க இங்கே சொடுக்கவும்
இந்த மூதுரை பாடல்கள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் அன்பர்கள் கேட்டு மகிழ வேண்டும் என்பதற்காக அருளாலயம் podcast சானலில் ஒலிபரப்பாகி உள்ளது.
அன்பர்கள் தமிழ் இன்பம் பருகி, நற்சிந்தனைகளை மனதில் பதித்து இந்த சமூகம் வளர நமது பங்களிப்பை தர வேண்டும்.
இந்த ஒலிப்பேழையை பெறுவதற்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் போதும்.
