பலன் தரும் பரிகாரங்கள்
ஜோதிட சாஸ்திரத்தில் பரிகார முறை தொன்று தொட்டு வரும் செயல் முறை ஒழுக்கம் தான்.
பரிகாரம் செய்தால் பலன் கிடைக்குமா என்ற எதிர்மறை சிந்தனைகளை ஒதுக்கி வைத்து விட்டு, எளிய முறையில் சொல்லும் அடிப்படை ஒழுக்கத்தை சொல்லி வரும் புத்தகம் இது.
இந்த நூலில் உள்ள செய்திகள் இந்த வார சோதிடம் என்ற நூலில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு தான். இவை அனைத்தும் மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டுவதாகவும் அவை பலன் தருவதாகவும் வந்த எண்ணற்ற கருத்துக்களின் எண்ணத்தில் இதனை நூலாக்கி படிக்கிறோம்.
இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து சமய வழிபாட்டு முறையில் ஆர்வம் இல்லாமல் அல்லது, கௌரவ குறைவு வந்து விடுமோ என்ற அச்சத்தில் சிலவற்றை தவிர்க்க முயற்சி செய்வார்கள். அவர்களும் பயன் பெற வேண்டும் என்று தனியாக இன்னொரு புத்தகமாக பொதுவான குறிப்புகளை வைத்து, இந்துக்களும் சரி, அந்த சமய முறையில் இல்லாதவர்களும் பயன் பெறும் வகையில் அமைக்கப்பட்டது தான் இந்த புத்தகங்கள்.
இந்த புத்தக ஆசிரியர் பன்முறை திறமை பெற்ற திரு.விசு அய்யர் அவர்கள். அவர் தம் படைப்புகளை தயாரித்து மின் புத்தகமாக வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
இந்த புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களில் பதிவாகிறது. சுமார் 22 நாடுகளில் நேயர்களை கொண்ட சானல் ஜி podcast சானலில் ஒளிபரப்பாகி வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
இது மின் புத்தகம் தான் இதனை பெறுவதற்கு உறுப்பினர் படிவத்தை நிரப்பி தேவையான விவரங்களை தந்தால், உங்கள் புத்தகம் உங்கள் மின்னஞ்சலில் வந்து விழுந்து விடும்.