📢 subscribe to our channel/podcast. It is free!
Books by Visu Iyer: அருள் தரும் அமாவாசை வழிபாடு

disable copy

அருள் தரும் அமாவாசை வழிபாடு

பிதுரர் கடன் என்னும் நீர் கடன் பற்றிய சாஸ்திர குறிப்புகள் நிறைய உள்ளன.. அவை அனைத்தையும் இன்றைய நாளில் கடைப்பிடிக்க முடியுமா என்றால், அவசரமான இன்றைய வாழ்க்கை சூழலில் அநேகமாக பலருக்கும் கேள்விக் குறியாக தான் இருக்கும்.


அருள் தரும் அமாவாசை வழிபாடு 

முறைப்படி செய்து வைக்கும் வாத்தியார் எனும் அய்யர்மார்கள் எண்ணிக்கையில் குறைவு. அவர்கள் சொல்வது போல செய்வதற்கு நமக்கு நேரமும் குறைவு. இதை விட அவர்கள் சொல்லும் மந்திரங்கள் நமக்கு புரியாது. நம்மையும் சொல்ல சொல்லி அதை சரியாக சொல்லவில்லை என்றால் தவறு வந்து விடுமோ என்ற பயத்தில் பலரும் சொல்லாமல் கையை கட்டிக் கொண்டு தான் நிற்பார்கள்.


 இந்த சூழலினை களைவதற்கு, சிந்தனையில் உதித்தது தான் இந்த எளிய வழிபாட்டு முறையில் அமைந்த புத்தகம். இறந்த பிறகு அந்த உயிர் வேறு ஒரு இடத்தில் பிறந்து இருக்கும் இல்லையா. அப்படியானால் அழிந்து போன உடலுக்கு வைக்கும் பெயரை சொல்லி சாங்கியம் செய்வது எப்படி பொருத்தமாக இருக்கும் என்று சிந்தித்து பார்த்தால், நாம் வழிபாடு செய்ய வேண்டியது இறந்த உடல்களையா? அல்லது அந்த உயிர் நற்கதி பெற வேண்டும் என்று ஆண்டவனிடத்தில் வழிபாடு செய்ய வேண்டுமா? என்ற இந்த கேள்வி நமக்கு முன் வந்து நின்றால் நாம் செய்ய வேண்டியது என்ன என்பது சொல்லாமலே புரியும்.

அது போன்ற சந்தேககங்களை கேள்வி பதிலாக்கி விளக்கம் சொல்லி இந்த புத்தகத்தின் முதல் பகுதி இடம் பெற்று உள்ளது. இரண்டாம் பகுதியில், எனது அன்புக்குரிய தோழர். திரு.பொன்.தாமரைக்கண்ணன் அவர்கள், சோதிட குறிப்புகளை தந்து இந்த கடனின் முக்கியத்துவத்தை சொல்லி இருக்கிறார்.

இந்த பகுதியின் நிறைவு பகுதியில் வழிபாட்டு முறைகள் மற்றும் வழிபாட்டு பாடல்கள் என வரிசை படுத்தி தரப்பட்டுள்ளது.

புத்தகம் வெளியிட்ட அடுத்த சில மணி நேரத்திலேயே அதிக அளவில் விற்று தந்து நமது பதிப்பகத்திற்கு பெருமை தேடி தந்த இந்த படைப்பை பெறுவதற்கு 
இணைப்பில் கேளுங்கள்.