கிரகங்களின் காரகத்துவம்
|
நூலின் பெயர் |
கிரக காரகத்துவம் |
|
நூல் ஆசிரியர் |
விசு அய்யர் |
|
வெளியீடு |
மணி பதிப்பகம். |
|
விலை |
ரூ.25 |
|
முதல் பதிப்பு |
2021 |
|
பதிப்பக
தொடர்புக்கு |
|
|
ஆசிரியர்
தொடர்புக்கு |
இது மின் புத்தகமா அல்லது
வீடியோ புத்தகமா என்று சொல்லும் அளவுக்கு அமைந்த creativityயுடன் அமைந்த அளவில்
சிறிய புத்தகம். சோதிட சிந்தனைகள் எப்போதுமே ஒரு சில வரிகளில் அல்லது ஒரு சில
விதிகளில் அடைத்து விட முடியாது என்ற நிலையில் உள்ள போது, இத்தனை குறுகிய புத்தகமா
என்று தான் முதலில் யோசித்தோம்.
ஆனால், இதில் முத்தாய்ப்பாக
செய்தி குறிப்புகளை வைத்து கிரக காரகத்துவம் என அமைத்து இருப்பது சிறப்பு.
எதையுமே வித்தியாசமாக செய்ய
நினைக்கும் இந்த நூலாசிரியரின் படைப்பாற்றலில் வெளி வந்த பாராட்டுக்குரிய படைப்பு
இது.
இந்த புத்தகத்திற்கு விலை
ரூ.25 என வைத்து இருக்கிறார்கள். இலவசகமாக
தருவதை தான் விரும்புகிறேன். ஆனால் எதற்கும் விலை வைத்தால் தான் அதற்கு மதிப்பு
இருக்கும் என்று அவர் இன்றைய நிலையை கருதி இயல்பாக சொல்வது மனதை வருடியது.
இந்த நூல் வேண்டுவோர் நூல் ஆசிரியரை
அல்லது பதிப்பகத்தாரை மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு கேட்டால் அடுத்த சில
நாட்களில் புத்தகம் உங்கள் inboxஇல் வந்து விழுந்து விடும்.
இந்த புத்த்கத்திற்கான விலை
நூல் கட்டமைப்பு மற்றும் நேரம் செலவு செய்ததற்கு தானே தவிர உங்கள் ரசனைக்கு அல்ல
என்பதை புரிந்து கொள்வது சிறப்பு.
இந்த புத்தகம் வீடியோவாக
இருப்பதால் அமேசான், மற்றும் விக்கி மீடியாவில் பதிவேற்ற முடியவில்லை. உலகம்
முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் கேட்டு மகிழும் நூலாசிரியரின் channel G என்ற
podcast சானலினை கேட்டு மகிழுங்கள்.
நூல் படைப்பாளிகள் தங்கள்
புத்தகங்களை நூல் மதிப்புரைக்கு அனுப்பலாம். அவைகள் விமர்சன குழு தேர்வின் படி
மதிப்புரை செய்து வெளியிடப்படும். இதற்கு இந்த படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புங்கள்..